மக்கள் திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடித்துவிட்டார்கள்: முதலமைச்சர் பழனிசாமி

இடைத்தேர்தல் வெற்றி மூலம், மக்கள் திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட பலரும், அதிமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், இடைத்தேர்தல் வெற்றி மூலம், மக்கள் திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளதாக தெரிவித்தார். அதிமுக பொறுத்த வரை நிறைவேற்றப்படும் திட்டங்களை மட்டுமே அறிவித்து பிரசாரம் மேற்கொண்டதாகவும், ஆனால் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, தோல்வி அடைந்தாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.