பள்ளிகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்டி கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் சாதனை

உலகில் தமிழர்கள் வாழாத இடமே இல்லை என்று கூறினால் மிகையாகாது.அதிலும் இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்.அங்கு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் சில நேரங்களில் அரசியல் எட்டிப்பார்க்கிறது.ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடி தமிழ் பெயர்களை அங்கிருக்கும் பள்ளிகளுக்கு சூட்டியுள்ளார் ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தமிழரான செந்தில் தொண்டமான். இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் 172 பள்ளிகள் உள்ளன.அதில் 140 பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.அங்கு தமிழ் மாணவர்கள் அதிகளவில் படித்தாலும் பள்ளியின் பெயர் சிங்கள மொழியில் இருந்தது. பள்ளிகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என அங்கிருக்கும் தமிழர்கள் 70 ஆண்டுகளாக போராடி வந்தனர்.இந்நிலையில் ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தமிழரான செந்தில் தொண்டமான் பல எதிர்ப்புகளை மீறி 140 பள்ளிகளுக்கு தமிழ் புலவர்கள், இந்து கடவுள்கள் பெயர்களை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் பெயர்களாக கம்பன், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், பாரதியார்,வைத்தீஸ்வரா தமிழ் வித்யாலயம் இப்படி தமிழர்களின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் பெயர்கள் வைத்துள்ளார்.சிங்களர்களின் கோட்டையில் ஒற்றை தமிழனாக போராடி தமிழ் மொழியை நிலை நாட்டி இருக்கும் செந்தில் தொண்டமானை அங்கிருக்கும் தமிழர்கள் பாராட்டி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!