65 ஆண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடாமல் இருக்கும் கிராமம்

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராம மக்கள், 65 ஆண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ஏரியூரை அடுத்துள்ள எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 13 கிராம மக்கள், 1954 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது இல்லை. இந்த ஊரில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் புத்தாடைகள் வாங்குவதும் இல்லை. பட்டாசுகள் வாங்குவதும் இல்லை. 65 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் தீபாவளியைக் கொண்டாடக் கடன் வாங்கி, அதன்மூலம் தீபாவளி கொண்டாடி விவசாயத்தைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தீபவாளியைக் கொண்டாடாமல், பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.