போர்வெல் அருகே பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் தாமு!

திருச்சி: நடுக்காட்டுப்பட்டியில் நடிகர் தாமு செய்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த பிரார்த்தனை கிராம மக்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்துள்ளது. சுஜித்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று தமிழக மக்கள் விடாது பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் #savesuijith என்கிற ஹேஷ்டேக்கிலும் சுஜித்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதில் நடிகர் தாமு நேரடியாக சம்பவ இடத்துக்கே வந்து பிரார்த்தனை செய்தார். இன்று காலை 8 மணி அளவில் நடுக்காட்டுபட்டிக்கு வந்த தாமு, சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தற்போதைய நிலை என்ன, மீட்பு பணிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார். குழி தோண்டப்படும் இடத்தின் அருகே செல்ல வேண்டும் என்று அதிகாரிகளின் அனுமதியை கேட்டார். அவர்களின் அனுமதி கிடைத்தவுடன், துளையிடப்படும் இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் அமர்ந்து அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தார். இந்த கிராம மக்கள் குழந்தை விழுந்ததில் இருந்தே கவலையிலும், சோகத்திலும் இருக்கின்றனர். மீட்பு பணியினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், ஒருவித பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர. இப்படிப்பட்ட சூழலில் தாமுவின் அங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்தது, சோகமான சூழலில் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)