ஞாயிற்று கிழமையிலும் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படவுள்ளது.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது மெட்ரோ பயணிகளுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்வோருக்கு 50 சதவீதம் டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக அரசு விடுமுறை நாட்களான அக்டோபர் 28ம் தேதி, டிசம்பர் 25ம் தேதி மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமையிலும் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படவுள்ளது. ஆனால் இந்த சலுகையானது pass வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது எனவும், கட்டண சலுகை வரும் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.