கருவியை கண்டுபிடிக்கும் தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு முதல் பரிசாக 5 லட்ச ரூபாய்....

ஆழ்துளை கிணற்றில் சிக்கும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க, சிறந்த நவீன கருவிகளை கண்டுபிடிப்போருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சுஜித்தின் மரணத்துக்கு தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்ததுடன், இதுபோன்ற மரணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க தேவையான நவீன கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டியொன்றை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். கருவியை கண்டுபிடிக்கும் தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு முதல் பரிசாக 5 லட்ச ரூபாய் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.