இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், விக்கிரவாண்டியில் 225 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்