இந்தியர்களின் டெபிட், கிரடிட் கார்டு விபரங்கள் விற்பனை

13 லட்சம் டெபிட் கிரெடிட் கார்டுகளின் தகவல்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.. ஒரு கார்டு பற்றிய தகவலை ஆன்லைனில் வாங்க ஏழாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும்..13 லட்சம் கார்டுகளில் 98 சதவீதம் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட தகவல்களாம்.குரூப் ஐபி என்கிற சிங்கப்பூர் கம்பெனிக்காரன் எச்சரிக்கிறான்..13 லட்சம் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளின் விபரங்கள் விற்பனையாகி உள்ளன என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளின் வழியாக இந்த விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக ஸிடிநெட் (ZDNet) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு கார்டுகளின் விபரங்களும் கிட்டத்தட்ட 100 டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கார்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கிம்மர் கருவிகள் மூலமாகவோ, பாயின்ட் ஆப் சேல் மூலமாகவோ சில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.ஜோக்கர் ஸ்டாஷ் என்று அழைக்கப்படும் ஒரு இருண்ட வலைத்தள சந்தையில் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு இந்த பாதுகாப்பு மீறல் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பயன்படுத்தி கடன் அட்டைகளின் விபரங்கள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)