நாமக்கல் அருகே இளம் பெண் ஒருவர் அவரது காதலனால் கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் வனிதா என்ற சோபனா. இவர் திருச்செங்கோட்டில் உள்ள பியூட்டி பார்லரில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். 29 வயதான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 19ம் தேதி காலை வேலைக்கு சென்ற இவர் தனது மகன் தேவாவின் பிறந்தநாளுக்கு துணிகளை வாங்கிக் கொண்டு வருவதாகவும் ஊருக்கு வரும் கடைசி பேருந்தை விட்டு விட்டதாகவும் ஆகையால் தனக்கு தெரிந்த ஒருவருடைய காரில் வருவதாகவும் தகவல் கூறியுள்ளார் நீண்டநேரமாகியும் சோபனா வராத காரணத்தால் அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் பகுதியில் ஒரு குட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக கிடந்தது சோபனா என்பது தெரியவந்தது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் மகனுக்கு வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. சோபனா அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை, எனவே பணம் நகைக்காக இவர் கொலை நடக்கவில்லை என்ற எண்ணத்திற்கு போலீசார் வந்தனர். பிரேத பரிசோதனையில் சோபனா பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்டையில் போலீசார் நடத்திய விசாரணையில் சோபனா வேலை பார்த்து வரும் பியூட்டி பார்லர் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் ரிக் அலுவலகம் வைத்தள்ள சுரேஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது. மேலும் சோபனாவின் செல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் போலீசார் நடத்திய விசாரனையில் சுரேஷ்குமாருடன் சோபனா தொடர்ந்த பேசி உள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கூட்டப்பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமாரை போலீசா கைது செய்தனர். இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாணையில் தனக்கும் சோபனாவுக்கும் கடந்த ஆறுமாதமாக நெருங்கி பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இதே வேளையில் சுரேஷ்குமார் வேறு சில பெண்களிடம் பேசி வந்தது பிடிக்காமல் சோபனா தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சோபனாவை அழைத்து சென்று கொண்டிருந்த போதும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சோபனாவின் கழுத்தை சுரேஷ் நெரித்ததாகவும் அதில் எதிர்பாராத விதமாக அவர் இறந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ்குமாருக்கு கோமதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)