2017ம் ஆண்டில் பொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

2018ல் வரவேண்டிய 2017ம் ஆண்டின் குற்ற ஆவணகாப்பகத்தின் அறிக்கை, ஓராண்டு தாமதத்திற்குப் பிறகு நேற்று வெளியானது. அந்த அறிக்கையில், வரலாற்றில் முதன் முறையாக பொய்செய்திகளை பரப்பியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 2017 1ம் தேதி முதல் டிசம்பர் 2017 31ம் தேதி வரை பொய் செய்திகள் பரப்பியவர்கள் மீது 257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. பொய்செய்திகளை பரப்புவதில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தையும், உத்தரபிரதேச மாநிலம் இரண்டாம் இடத்தையும், கேரளா மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. 138 சம்பவங்கள் குறித்த பொய் செய்திகளை மத்தியபிரதேசமும், 32 சம்பவங்கள் குறித்த பொய்செய்திகளை உத்தரபிரதேசமும், 18 சம்பவங்கள் குறித்த பொய் செய்திகள் கேரளாவிலும் பரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் 16 சம்பவங்கள் மற்றும் 11 பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பொய் செய்திகளும், தெலங்கானாவில் 11ம், ஆந்திராவில் ஆறு சம்பவங்களும், கர்நாடகாவில் 5 சம்பவங்களை வைத்தும் பொய் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலுமிருந்து போலி செய்திகளைப் பரப்பியதற்காக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு