ஸ்ரீநகர்,பயங்கரவாதிகள் தாக்குதல்: கையெறி குண்டு வீசியதில் பொதுமக்கள் 20 பேர் காயம்

காஷ்மீரில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது இன்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை கூறியுள்ளதாவது: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த சோபூர் நகரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இன்று பயணிகள் காத்திருந்தனர். பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது திடீரென்று பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் பொதுமக்களில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேரில், 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகருக்குள் வந்து கையெறிகுண்டுகளை வீசிய தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)