செல்வியின் மருமகன் ஜோதிமணி மீது பண மோசடி புகார் செய்யப்பட்டது பணம் திரும்ப கொடுக்கப்பட்டதால் புகார் செய்தவர்கள், வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்

முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் மருமகன் ஜோதிமணி மீது பண மோசடி புகார் செய்யப்பட்டது பணம் திரும்ப கொடுக்கப்பட்டதால் புகார் செய்தவர்கள், வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர் இதற்கிடையில், ஜோதிமணியின் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜாகிர் அகமத் தமான் என்பவர், சென்னை சவுகார் பேட்டையில் உள்ள காஸ்மெட்டிக் வியாபாரியான தினேஷை சந்தித்தார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ. 80லட்சம் மதிப்பிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக 1கோடி வாங்கி தருவதாக தினேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் 80 லட்சம் பணத்துடன் சென்றார். அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பெரிய பையை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், ஜோதிமணி மற்றும் ஜாகிரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜோதிமணி ஏற்கனவே பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருக்கிறது. அந்த வழக்குடன் சேர்த்து இதுவும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது வாபஸ் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பணம் திருப்பித் தரப்பட்டதால் ஜோதிமணி மீதான புகாரை தினேஷ் வாபஸ் பெற்றுக்கொண்டார் இந்நிலையில் கருணாநிதியின் மகளான செல்வி, எங்களுக்கும், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும், நடவடிக்கைக்கும், தொடர்பில்லை என மறுத்துள்ளார். யார் இந்த ஜோதிமணி செல்வி, செல்வம் ஆகியோர் ஒரே மகள் டாக்டர் எழிலரசி. இவரின் கணவர் தான் இந்த ஜோதிமணி. மருத்துவம் படிக்கும்போது இருவரும் காதலித்து, பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். ஜோதிமணி மயக்கவியல் மருத்துவ நிபுணராக இருக்கிறார். ஜோதிமணி, எப்போதும், விலை உயர்ந்த பொருட்களையே பயன்படுத்துவார். இவர், ஓட்டும் கார் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்டது. சென்னையில், பசும்பொன் முத்துராமலிங்க சாலையில் உள்ள இவரது வீடு பிரமாண்டமானது. .ஜோதிமணி - எழிலரிசி மகளுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.