பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி: மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும். இந்த முடிவை பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகத்துக்கும் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் போது 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ந்தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு