தி.மு.க. காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி, உடல்நலக்குறைவால் காலமானதால், அந்தத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 84.41 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே, முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் இறுதியாக 44924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முத்தமிழ்ச்செல்வன் 1,13,766 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68, 842 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சென்று வெற்றிச் சான்றிதழை வேட்பாளர் முத்தமிழ் செல்வன் பெற்றுக் கொண்டார். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரூபி மனோகரனை விட 33 ஆயிரத்து 445 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற நாராயணன் வெற்றிச் சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு