சொமாட்டோவின் அலுவலகத்திற்கு சென்னை மாநகரட்சி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

சென்னை மாநகரில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நோய்த் தொற்று பரவும் சூழல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தேங்கி இருக்கும் மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்காங்கே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்தவகையில் சொமாட்டோ நிறுவனத்தின் அலுவலகத்தில் கொசு உற்பத்தி ஆகும் வகையில் சூழல் இருந்ததால் அந்நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி 'தி நியூஸ்மினிட்' தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “சேத்துபட்டு பகுதியிலுள்ள சொமாட்டோ நிறுவனத்தின் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத டெலிவரி பைகள் மாடியில் வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் சென்று பார்த்தப் போது அதில் மழை நீர் தேங்கி இருந்தது. இதன் மூலம் கொசுக்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்நிறுவனத்திற்கு நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தோம்.இதற்கு அந்த நிறுவனமும் தவறை ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் அபராத தொகையை செலுத்தவும் ஒப்புக் கொண்டது. மேலும் நிறுவனத்தின் அலுவலகத்தை சுத்தமாக வைத்து கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வகை சோதனைகள் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என அனைத்திலும் நாங்கள் தீவிரமாக நடத்தி வருகிறோம். ஏனென்றால் இது மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷயம் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு இடத்தில் கொசு உற்பத்தி ஆகி விட்டால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த அளவிற்கு அது மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)