தீபாவளி சிறப்பு பேருந்துகள்: நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பயணம்

போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 113 பேர் பயணித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்திகளை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை துவக்கி வைத்தார். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் 738 பேருந்துகள் என 2 ஆயிரத்து 963 பேருந்துகளில் நேற்று ஒரே நாளில், 1 லட்சத்து 37 ஆயிரத்து 113 பேர் பயணித்துள்ளனர். இந்த சிறப்பு பேருந்துகள் 28 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.