ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நெல்லையைச் சேர்ந்த வேலுசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கூறி போலீஸ் தடுத்து நிறுத்தியதாகவும் அதனால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் வேலுசாமிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, தலைமை காவலர்கள் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம், ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்ய விதியுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.1,001-க்கான வரைவோலை, மன்னிப்புக் கடிதம் அளிக்கவும் தலைமை காவலர்கள் இருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள்- காவல்துறையினர் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல் துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)