ரிப்போர்ட் வேணும்.. தோல்வி பற்றி விளக்கம் கேட்கும் ஸ்டாலின்!

சென்னை: 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது எப்படி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கட்சி தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்றுதான் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார்இந்த தோல்வியை திமுக தலைவர் ஸ்டாலின் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். கண்டிப்பாக இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற்று விடுவோம் என்று அவர் நினைத்து இருந்த நேரத்தில், திமுக அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. அதிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளஇரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். சாலை பிரச்சார கூட்டங்கள், வாகன பிரச்சாரம் இரண்டும் மேற்கொண்டார். ஆனாலும் திமுக தோல்வியை தழுவி உள்ளது. இதனால் திமுக எங்கு சறுக்கியது என்று ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு இருக்கிறாராம். வேட்பாளர் தேர்வில் தவறு நேர்ந்துவிட்டதா? வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதில் ஏதாவது குளறுபடி நேர்ந்ததா? உறுப்பினர்கள் இடையே பூசல் இருக்கிறதா என்று பல விளக்கங்களை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட இருக்கிறார். டி. ஆர் பாலுவும் இந்த சந்திப்பில் உடன் இருந்துள்ளார். இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அதை களைய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதனால் திமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)