பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்...!

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அசுரன் படத்தை பாராட்டி, மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அசுரன், படம் அல்ல பாடம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மு.க. ஸ்டாலினை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என குறிப்பிட்டிருந்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்