தூர்வாராத கால்வாய்க்கு ரூ.5 லட்சம் செலவு கணக்கு காட்டிய அதிகாரிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாசன கால்வாயை தூர்வாராமலேயே அரசு அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காட்டி சுருட்டி விட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள குடமுறட்டி கால்வாய் மூலம் சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகளே, சொந்த பணத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 7 நாட்களில் தூர்வாரியுள்ளனர். இந்நிலையில், அக்கால்வாயை 5 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியதாக தெரிவித்து, மக்களின் கண்களுக்கு தென்படாத இடத்தில் கல்வெட்டை அமைத்து அதிகாரிகள் புகைப்படம் எடுத்துச் சென்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்ததும், கல்வெட்டை அதிகாரிகள் இடித்து அகற்றி விட்டதாகவும், எனவே, கால்வாயை தூர்வாராமலேயே 5 லட்சம் ரூபாயை கணக்குக் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை