திமுக மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு...!

மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதேபோல, தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 25 கோடி ரூபாய் வழங்கியது குறித்து, ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பழனி முருகன் கோயிலில் இன்று காலை பிரேமலதா சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தொடரும் என கூறினார். கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே நீட் தேர்வில் தவறு செய்வதாக பிரேமலதா விமர்சித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)