நாடகமாடாமல் எழுந்து நில் என பாதுகாப்புப் பரிசோதகர் கூறியதாக புகார்

டெல்லி விமான நிலையத்தில் நடக்க இயலாத பெண் மாற்றுத்திறனாளியை நாடகமாடாமல் எழுந்து நிற்குமாறு பாதுகாப்பு பரிசோதகர் கூறி அவமதித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைராலி மோடி ((Virali Modi)) எனும் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்பாட்டாளர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தை இணைத்துள்ள அவர், தான் டெல்லியில் இருந்து மும்பை செல்லும்போது பாதுகாப்பு பரிசோதனையில் தனது தனிப்பட்ட சக்கர நாற்காலியை லக்கேஜில் அனுப்பிவிட்டு, பாதுகாப்பு படையினரிடம் கூறி அவர்களின் அனுமதியோடு ஒரு கூலி ஆளை வைத்து தன்னை விமான இருக்கை வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறியுள்ளார். ஆனால், ஒரு பரிசோதனை கவுன்டரில் தன்னை சோதித்த பெண் சி.ஐ.எஸ்.எஃப். ஒருவர், தன்னால் நடக்கவோ, நிற்கவோ முடியாது எனக் கூறியும், தன்னை நிற்கும்படி கட்டாயப்படுத்தியதோடு, மூத்த அதிகாரியிடம் சென்று நடக்கமுடிந்தும் நாடகமாடுவதாக தன்னை விமர்சித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2006-ல் முதுகில் அடிபட்டதில் இருந்து தன்னால் நடக்க முடியாமல் போனதையும், தனது பாஸ்போர்டில் தான் சக்கர நாற்காலியுடன் உலகின் பல நாடுகளுக்கு பயணித்ததைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு கோரியும், ஏற்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். இது தான் மாற்றுத் திறனாளியை நடத்தும் விதமா என்றும் அந்த கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)