பிளேடில் அறுத்துக்கொண்டு என் மீது பழி போடுகிறார்கள்:

கோவில்பட்டி அருகே போலீஸாரைத் தாக்கியதாக சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா, போலீஸாரே பிளேடில் அறுத்துக்கொண்டு தன் மீது பழி போடுகிறார்கள் எனத் தெரிவித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த செப்.25-ம் தேதி (புதன்கிழமை) ரவுடி மாணிக்கராஜா தோட்டத்தி பதுக்கியிருந்த ஆயுதங்களை எடுக்கச் சென்றபோது அவர் போலீஸாரைத் தாக்கியதால் சுடப்பட்டதாகக் காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இதனையடுத்து ரவுடி மாணிக்கராஜா சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவுடி மாணிக்கராஜா, "நான் ரவுடியே இல்லை. என்னை இப்படி ஆக்கியதே போலீஸ்தான். நான் யாரையும் தாக்கவில்லை. அவர்களே கைகளில் பிளேடால் காயம் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் மீது என் கைரேகை இருந்தா சொல்லுங்க. என்னை வேண்டும் என்றேதான் சுட்டார்கள். என்னை அவர்கள் தோட்டத்தில் பார்க்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் அருகே நானும் என் மச்சானும் நின்றபோதே பார்த்தார்கள். பின்னர் அங்கிருந்து என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சுட்டார்கள். எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது" என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதோடு போலீஸாரின் போலி என்கவுன்ட்டர் முயற்சி என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)