இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைகைக்கு கடத்த முயன்ற பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை மண்டபம் மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு விசைப்படகில் கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மெரைன் போலீசார் மண்டபம் கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் விசைப்படகுடன் நின்ற இருவர் காவல்துறையினரை கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசைப்படகை சோதனையிட்டதில், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 450 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்துல் ரஹீம், காதர் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கடத்தல்காரர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் பாம்பன் கடலில் விடப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்