முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது பிரிவு உபச்சார விழாவில் பேசியதாக சென்னையுடன் ஒன்றிவிட்டேன் இனி இங்கேதான் வாழப்போகிறேன்"

சென்னையின் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது, இனி இங்கேதான் வாழப்போகிறேன் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது பிரிவு உபச்சார விழாவில் பேசியதாக . பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், "எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக கடந்த இரண்டுவாரகாலமாக எனக்கு ஆதரவளித்த, பேசிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஓராண்டாக சென்னையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிப்போய்விட்டேன். கடந்த ஓராண்டாக சென்னை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. காரணம் மும்பையை ஒப்பிடும் போது இங்குள்ள சீதோஷ்ண நிலை, அங்குள்ளது போன்று தொடர் மழை வெள்ளம் இல்லாதது, அதுமட்டுமல்ல நல்ல சூழ்நிலை, குறைந்த மாசு, அதிக சுத்தம், சிறப்பான உட்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுதும் இப்படித்தான் உள்ளது. அதனால்தான் நானும் என் கணவரும் சென்னையிலேயே குடியேறுவதென முடிவு செய்துவிட்டோம். சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால்தான், இங்கு வீடு வாங்கியுள்ளோம்" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்