ஜனநாயக மக்கள் எழுச்சி கழக சார்பில் திருச்சி, மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு !

மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு ஆபத்தாகவும், இடையூராகவும் உள்ள இடங்களை சீரமைக்க கோரி சம்பந்தமாக திருச்சி , மாநகராட்சி ஆணையரிடம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு அளித்தனர் அவர் கொடுக்கபட்ட இவ்மனுவில் கூறியதாவது . திருச்சிராப்பள்ளி மாநகரில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் இல்லாமலும் இருக்கும் வேகத்தடைகளில் வெள்ளை குறியீட்டு கோடுகள் இல்லாமலும் உள்ளது இதனால் இருசக்கர வாகனத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர் எனவே விபத்தினை தடுக்க அப்பகுதியில் வேகத்தடைகளும், வேகத்தடைகளில் வெள்ளை குறியீடு கோடுகள் அமைக்க வேண்டுகிறேன். மேலும் கலைஞர் அறிவாலயம், சாஸ்த்திரி நகர், தில்லை நகர், நீதிமன்ற பிரதான சாலை உட்பட முக்கிய பகுதிகளில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் வாகன ஒட்டிகளும் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லும் மாணவர்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர் மேலும் பாதாள சாக்கடை மேல் மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் வெளியேறி வருகிறது இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பல தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது இதனை சீரமைத்து பொதுமக்களுக்கு சுகாதாரத்தை ஏற்படுத்தி தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார் . இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கே. அயூப்கான் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாணோர் உடன் இருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்