முதல்வர், சென்னை திரும்பியதும், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்பட உள்ளது.

சென்னை : முதல்வர், இ.பி.எஸ்., வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியதும், தன்னை ஆளுமை மிக்க முதல்வராகவும், தலைவராகவும் காட்டும் வகையில், நான்கு அமைச்சர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார். புதிதாக உதயமான, 4 மாவட்டம் உட்பட, 13 மாவட்ட செயலர்களும், ஒன்பது வாரியத் தலைவர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிரடி ஓரிரு நாட்களில், வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து, தாயகம் திரும்பும், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, சென்னை விமான நிலையத்தில், சிறப்பான வரவேற்பு அளிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை, வெற்றிகரமாக முடித்த கையோடு, இம்மாத இறுதியில், அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டவும், முதல்வர் முடிவு செய்துள்ளார். பொதுக்குழுவில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆலோசிக்க உள்ளார். இது தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர்களிடம், கருத்துகளை கேட்கவும் திட்டமிட்டு உள்ளார். ஜெயலலிதாவை போல, பொது மக்களிடம், தன்னை ஆளுமை மிக்க முதல்வராகவும், கட்சித் தொண்டர்களிடம், ஆளுமை மிக்க தலைவராகவும் வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே, ஆட்சியிலும், கட்சியிலும், சில அதிரடி முடிவுகளை எடுக்க, முதல்வர் திட்டமிட்டு உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின், நியூயார்க் நகரில், 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை, இ.பி.எஸ்., சந்தித்துள்ளார். 2,780 கோடி ரூபாயில் தொழில் துவங்க, 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. முதல்வர், சென்னை திரும்பியதும், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்பட உள்ளது. வாய்ப்பு குறிப்பாக, தென்மாவட்டத்தை சேர்ந்த, ஒரு பெண் அமைச்சரின் பதவியை பறித்து, நாடார் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. வட மாவட்டத்தை சேர்ந்த, ஒரு அமைச்சரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக, யாதவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. தன் சட்டை பையில், ஜெயலலிதா, சசிகலா படத்தை வைத்திருக்கும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த, ஓர் அமைச்சரின் பேச்சினால், முதல்வர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவரையும் மாற்றி விட்டு, அதே மாவட்டத்தில் அதிருப்தியாக இருக்கும், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரை நீக்கி விட்டு, ஆதிதிராவிட சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. பதவி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களான, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களுக்கு, புதிய மாவட்டச் செயலர்களும், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி உட்பட, ஒன்பது மாவட்ட செயலர்களை மாற்றி விட்டு, புதியவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கடலுார் உட்பட, ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த, முக்கிய பிரமுகர்களுக்கு, வாரிய தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்