போக்குவரத்துகாவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர் முகாம்
போக்குவரத்து காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் நடைபெற்று வருகிறது.சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, புகார் மீதான நடவடிக்கை தொடர்பாகவும், சி.எஸ்.ஆர்., எஃப்.ஐ.ஆர். ஆவணங்கள் குறித்தும் பொதுமக்கள் குறைகளை சொல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தங்கள் பகுதியில் உள்ள போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லும் வகையிலும், கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது.அதன்படி, சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல்பிரிவு சார்பில், எழும்பூர் ராஜரத்தினம் திடலில், குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த வாரம் சட்டம் ஒழுங்கு பிரிவு சார்பிலும் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.இதை அடுத்து தெற்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையரான எழிலரசன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்