பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, "இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் தேசிய தலைமையை ஆலோசித்த பின்பே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் " எனத் தெரிவித்தார். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும். அதிமுகவின் அடிப்படைக் கொள்கையே நீட் தேவையில்லை என்பது தான். கீழடி அகழாய்வுக்கு தேவை இருந்தால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)