தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, வாமனராக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமாக வழங்க மகாபலிச் சக்ரவர்த்தி ஒப்புக்கொண்ட நிலையில், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைக்க மகாபலி மன்னன் பாதாளத்துக்குச் செல்வதாக ஐதீகம் இந்நிலையில் ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காணவேண்டும் என்ற மகாபலி மன்னனின் கோரிக்கைக்கு வாமனர் இசைவளித்தார் என்ற நம்பிக்கையின் படி மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை ஓணம் பண்டிகை சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஓணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோவை கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. ஓணம் பண்டிகை நாளான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூ கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.ஓணம் சத்யா எனப்படும் அன்னதானமும் கோவிலில் வழங்கப்பட உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்