உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, தலித் சமூகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சஹரன்பூர் அடுத்த குன்னா கிராமத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சிலர் உடைத்துள்ளனர். சிலை உடைக்கப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த தலித் மக்கள், கம்புகள் மற்றும் ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேஹாத்திலிருந்து சஹரான்பூர் செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதே இடத்தில் மீண்டும் புதிய சிலையை நிறுவ வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச போலீசார், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)