இஸ்லாமிய புத்தாண்டு செப்டம்பர் 2-ந்தேதி தொடக்கம் செப்டம்பர் 11-ந்தேதி ஆஷுரா தினம் தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாமிய புத்தாண்டு செப்டம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது என்றும், ஆஷுரா தினம் செப்டம்பர் 11-ந்தேதி என்றும் தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:ஹிஜ்ரி 1440 துல் ஹஜ் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை ஆங்கில மாதம் 31-08-2019 தேதி அன்று மாலை முஹர்ரம் மாத பிறை சென்னையிலும் ஆ2) மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 02-09-2019 தேதி அன்று முஹர்ரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் யொமே ஷஹாதத் (ஆஷுரா தினம்) புதன்கிழமை 1-09-2019 தேதி ஆகும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஹர்ரம்மகத்தில் நோன்பு இ ஸ் ல ா மி ய புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரமாகும். முஹர்ரம் என்றால் சங்கைக்குரியது, கண்ணியமாக்கப்பட்டது, கெளரவிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. இப்புனித முஹர்ரம் மாந்தில் எப்பொழுதும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 10-ல் மட்டும் நோன்பு வைத்து வந்தார்கள். கடைசியில் ஒரு தடவை இன்ஷா அல்லாஹ் நான் அடுத்த வருடம் உயிரோடிந்தால் முஹர்ரம் பிறை 9, 10 தினங்களும் நோன்பு வைப்பேன்" என்று கூறினார்கள். ஆனால் அடுத்த வருடம் அண்ணலார் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள். இருந் தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை செயல் படுத்தும் பொருட்டு இன்றும் எண்ணற்ற இஸ்லாமிய சகோதரர்களும் 9, 10ல் நோன்பு நோற்று வருகின்றனர். அவ்விரு தினமும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)