திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விரைவில் முழு தடை

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விரைவில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் நடைபெற்று வரும் பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியின் ஒரு கட்டமாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுவதுமாக தடை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த நடைமுறையை படிப்படியாக அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையில் திருமலையில் வழங்கப்படும் ஜல பிரசாதம் குடிநீர் சுத்தமானதாக இல்லை என்று தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்காலுக்கு பக்தர்கள் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார துறை மற்றும் குடிநீர் விநியோக துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்