சாலையில் கிடந்த மணிபர்சை மீட்டு போலீசில் ஒப்படைத்த இளைஞர்

திருத்தணி அருகே மாநில நெடுஞ்சாலையில் கிடந்த மணிபர்ஸை, வங்கியின் தற்காலிக ஊழியர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார். அதில், 14,303 ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. போலீசார் உரியவரை தொடர்பு கொண்டு அதனை ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் திருத்தணி பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வங்கியின் பணி நிமித்தமாக நேற்று காரில் அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு ஜெகன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, தலையார்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மணிபர்ஸ் சாலையில் கிடந்ததை கண்டு, காரை நிறுத்தி, அதனை எடுத்துள்ளார்.  அதில், 14,303 ரூபாய், வங்கிகளின் ஏ.டி.எம்.,கார்டுகள், ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. இதையடுத்து ஜெகன் அதனை திருத்தணி போலீஸ் எஸ்.ஐ., சரவணனிடம் ஒப்படைத்தார். பின்னர், மணிபர்ஸில் இருந்த விலாசம் மற்றும் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டபோது, அதை தொலைத்தவர், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மனேரி பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என தெரியவந்தது.  இதனையடுத்து எஸ்.ஐ., சரவணன், தன்ராஜை நேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து ஜெகன் முன்னிலையில் மணிபர்ஸை ஒப்படைத்தார். அதிலிருந்த பணம் மற்றும் கார்டுகள் சரியாக உள்ளது என போலீசார் மற்றும் வங்கி ஊழியருக்கு தன்ராஜ் நன்றி தெரிவித்தார். வங்கி தற்காலிக ஊழியரின் இந்தச் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)