சென்னை கந்தன்சாவடியில் ஐ.டி. நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு நேற்று இரவு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 13 மாடிகளைக் கொண்ட அந்த கட்டடம் முழுமையாக சோதிக்கப்பட்டது. சோதனை முடிவில் குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)