ஊடகத்துறையில் உச்சம் தொட்ட பலரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர உள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் ``Changing screens & Emerging Media Paradigms” என்ற தலைப்பில் மாறிவரும் ஊடகத் துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ``MEDIA CON'19" என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஊடகத்துறையில் உச்சம் தொட்ட பலரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர உள்ளனர். இதில் மீடியா ஆசிரியர்கள், மீடியா மாணவர்கள் கலந்துகொள்ளலாம். செப்டம்பர் 30 -ம் தேதி காலை நிகழ்வில், `21 -ம் நூற்றாண்டில் திரைப்படம் தயாரிப்பு மற்றும் விளம்பரத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கலைப்புலி தாணு தனது கருத்துகளை பகிர இருக்கிறார். புகைப்படத் துறையில் இருக்கும் புதிய டிஜிட்டல் ட்ரெண்ட் தொடர்பாக பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட் ராம் தனது கருத்துகளை பகிர்கிறார். அதேபோன்று ஒளிப்பதிவு தொடர்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் தனது அனுபவங்களைப் பகிர உள்ளார். அதேபோன்று சினிமாத் துறை சந்திக்கும் சவால்கள் தொடர்பாக இயக்குநர் பால்கி தன்னுடைய கருத்துகளை முன்வைக்கிறார். மேலும் தொலைக்காட்சி ஊடகத்தில் ஏற்பாடும் மாற்றங்கள், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது. இரண்டாம் நாள், அதாவது அக்டோபர் 1 -ம் தேதி டிஜிட்டல் யுகம் குறித்தும் சமூக வலைதளத்தை இளைஞர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து ஃபேக் நியூஸ், சினிமா தயாரிப்பில் இருக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள், புதிய ரசிகர்களுக்கான திரைக்கதை, யூடியூப் பிசினஸ் மாடல் போன்ற தலைப்புகள் அனுபவம் வாய்ந்த பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். இதில் திரைத்துறை மற்றும் ஊடகத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்கள் தங்களின் கருத்துகளை பகிர உள்ளனர். இரண்டு நாள்கள் காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழே இருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்லலாம்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்