முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். எம்.ஜி.ஆர் கழக தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தனது 94 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.எம்.வீரப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பழைய நினைவுகளை ஆர்.எம்.வீரப்பன் பகிர்ந்துகொண்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை