மூன்றே மாதங்களில் வங்கிகளில் ரூ.32,000 கோடி மோசடி..!

நாடு முழுவதும் 32 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி வழக்குகளால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 18 பொதுத் துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் இந்தவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியில் 12 ஆயிரத்து 012 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி தொடர்பாக 1,197 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அலகாபாத் வங்கியில் 2 ஆயிரத்து 855 கோடி ரூபாய் தொடர்புடைய 381 மோசடி வழக்குகள் நடந்து வருகின்றன. இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்