இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..!

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்