சில தனியார் மருந்துக்கடைகள் பரிந்துரைச் சீட்டுகளின்றி மருந்துகள் எந்தெந்த மருந்துகளை `பிரிஸ்கிரிப்ஷன்' இல்லாமல் வாங்கலாம்...

உலக மருந்தாளுநர்கள் தினம் செப்டம்பர் 25-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் `அனைவருக்கும் பாதுகாப்பான, சரியான மருந்துகள்' என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனையின் மருந்தியல் துறை மேலாளர் பிரசாத் குச்சிப்புடியிடம்,`மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சில மருந்தகங்கள் மருந்துகளை வழங்குகிறார்களே?' என்று கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர் ,``பாராசிட்டாமல், அஜீரணத்துக்கான மருந்து, வலி நிவாரண களிம்புகள் போன்றவை பரிந்துரைச்சீட்டு இல்லாமல் விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட மருந்துகள் (Over The Counter - OTC) ஆகும். இதுபோன்ற மருந்துகளின் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடவும் சட்டத்தில் அனுமதியுள்ளது. அதுபோன்ற மருந்துகளை மட்டுமே மருந்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக்கடைகளில் விற்பனை செய்யவும் வாங்கவும் முடியும். அவை தவிர, பிற மருந்துகளை மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்றி வாங்குவதும் வழங்குவதும் ஊக்குவிக்கதக்க செயல் அல்ல. ஒருவேளை தவறான மருந்து வழங்கப்பட்டால் அது நோயாளிகளின் உடல்நலனைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. லாப நோக்கத்துக்காகச் செயல்படும் சில தனியார் மருந்துக்கடைகள் பரிந்துரைச் சீட்டுகளின்றி மருந்துகள் வழங்குகின்றன. மக்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை உள்ள மருந்தகங்கள் தகுந்த பரிந்துரைச்சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விநியோகிக்கின்றன" என்றார். ப.கா.ரேவந்த் ஆண்டனி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்