ஐநா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சனையைக்கிளற பாகிஸ்தான் புதிய தந்திரம்...

ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப இருப்பதாகவும், அதற்காக எல்லையில் மோதல்களை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஐநா.பொதுக்குழுக் கூட்டம் நியுயார்க்கில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ள பாகிஸ்தான், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுவதற்காக எல்லையில் துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் எல்லையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் என்று இந்திய ராணுவத்திற்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவலும் அதிக அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இம்முறை பிரதமர் மோடியுடன் அமெரிக்கா செல்லவில்லை. அவர் காஷ்மீர் நிலையை கண்காணிக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போது, காஷ்மீரில் வன்முறைகள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அஜித் தோவல் மேற்கொள்வார்.ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய மாநாடு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று விவாதத்தை எழுப்புவதற்கு பாகிஸ்தானுக்கு கால அவகாசம் குறைந்து விட்டது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் நடப்பதாக பாகிஸ்தான் எழுப்பிய புகாரை ஐநா.மனித உரிமைக் கவுன்சில் ஏற்கவில்லை . செப்டம்பர் 27ம் தேதி ஐநா.பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து உரை நிகழ்த்த உள்ள இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும் போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலும் காஷ்மீரிலும் உச்சக்கட்ட வன்முறை, மோதல்கள் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் கருதுகின்றனர்.எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் கடந்தாண்டு 2 ஆயிரத்து 140 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டில் ஆகஸ்ட் இறுதியிலேயே இந்த எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்