விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்?

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். ஏற்கனவே மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. கதாநாயகியாக நடிக்க ராஷிகன்னா, ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவருக்கு கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். ஏற்கனவே ரஜினியின் 'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)