வானத்தில் இருந்து இரவில் மர்ம பொருள் விழுந்ததால் மக்கள் பீதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இரவில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. கவசம்பட்டு பகுதியில் நேற்றிரவு விழுந்த மர்ம பொருளில் 2 சிறு எல்இடி விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் மற்றும் தடவியல் துறை நிபுணர் விஜய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டணர். அதுவெடிபொருள் இல்லை என்பது தெரியவந்ததால் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர். அது வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பொருளாக இருக்கலாம் எனவும், ஆய்வுக்கு பின்புதான் அது என்ன பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொருள் என்பது தெரிய வரும் என்றும் தடயவியல் நிபுணர் தெரிவித்தார். இதற்கிடையில் அந்த மர்ம பொருள் வானத்திலிருந்து விழுந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்