ரூ.10 லட்சம் கேட்டு இளம்பெண் கடத்தல்?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்கு விக்னேஷ் என்ற மகனும் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் வித்யா தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வித்யா சென்றுள்ளார். திருமணத்தை முடித்து விட்டு காரைக்காலில் இருந்து பேருந்து மூலம் நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பெண்ணின் தந்தை ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், வித்யாவை கடத்தி வைத்துள்ளதாகவும் 10 லட்ச ரூபாய் பணம் தந்தால் விட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். சிறிதி நேரத்தில் விக்னேஷுகும் இதே போன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வித்யா கடத்தப்பட்டதை உறுதிசெய்ய அவரையே விக்னேஷிடம் பேச வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் 3 உதவி ஆணையர்கள், 7 காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வித்யாவிற்கு கடைசியாக வந்த செல்போன் அழைப்பை வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்