அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை..!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள், நடைபாதை உள்ளிட்ட பொதுஇடங்களில் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேனர்களுக்கான இடைக்காலத் தடையை வரும் காலத்தில் நீக்கும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அல்லது தனியார் விளம்பரம் சார்ந்த பேனர்கள் வைக்க வேண்டுமெனில் இரண்டு நாட்களுக்கு முன்னரே 200 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் காவல்துறையிடம், பேனர்கள் வைக்க தடையில்லா சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு அச்சிடப்படும் பேனர்களுக்கு அனுமதியில்லை எனவும் பள்ளி, மருத்துவமனைக்கு 100 மீட்டர் அருகில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)