விதி மீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க குழுக்கள் அமைத்து கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் விதியை மீறி பேனர் வைத்தல் மற்றும் மோசமான சாலைகளை கண்காணிக்க குழு அமைத்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் ஏற்கனவே பேனர் தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் விதி மீறி வைக்கப்படும் பேனர்கள், மோசமான சாலைகளை கண்காணித்து புகார் தர தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இதுதொடர்பாக இக்குழு எடுக்கும் வீடியோ, புகைப்படங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளம் மூலம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் அரசுத்துறைகள், நகராட்சிகள், காவல் துறையினர், உள்ளாட்சித்துறையினர் ஆகியோருக்கும் பொறுப்புண்டு என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1031 என்ற எண்ணின் மூலமாகவும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் கிரன்பேடி தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்