பாலம் என்ற பள்ளத்தால் உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முருகபவனம் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்தப் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டுள்ளது.ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளோ ஊராட்சியாக இருந்தபோது இருந்ததை விட மிகவும் மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது இந்தப் பகுதியில் சுமார் 1000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.மேலும் ஒரு தனியார் ஆரம்ப பள்ளி ஒன்றும் உள்ளது ஆனால் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி,குடி நீர் வசதி, கழிப்பிட வசதி உட்பட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தாராமல் அரசு தங்களை வஞ்சித்து வருவதாகவும் தங்கள் பகுதிக்குள் நுழையும் இடத்தில் இருந்த பாலம் உடைந்து சில மாதங்கள் ஆகியும் அதை சரிசெய்து தரவேண்டி பல முறை மனுகொடுத்தும் இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் அந்த வழியாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் அடிக்கடி குழந்தைகளுடன் கீழே விழுந்துவிடுவதாகவும் அதனால் படுகாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இரவு நேரத்தில் அதிகமாக விபத்து நடப்பதாகவும் ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன் பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இரவு நேரத்தில் அதிகளவில் வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுவதாகவும் பாலத்தில் உள்ள கம்பிகள் செங்குத்தாக நிர்பதால் உயிர்பலி நிச்சயம் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் இப்பகுதியில் மளிகைகடை நடத்திவரும் திரு. செல்லபாண்டி எனும் சமூக ஆர்வளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்பகுதி ஊராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்டு விட்டதாகவும் எனவே மாநகராட்சி தான் சாலை அமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகள் இன்னும் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை அதனால் ஊராட்சி தான் சாலை அமைத்து தரவேண்டும் என்றும் கூறுகின்றனர்.இதனால் பொதுமக்கள் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உயிர் பலி ஏற்படும் முன் தரமான பாலமும் சாலையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்