விவசாயத்திற்கான வங்கி நகைக்கடன் வழங்குவதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு

விவசாயிகள் அல்லாதவர்களுக்கு மானிய வட்டியில் நகை கடன் வழங்குவதை அக்டோபர் மாதம் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வேளாண் கடன் என்ற பெயரில் மானிய வட்டியில் நகையை அடமானமாகப் பெற்று வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் நகையை அடமானம் வைத்து ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெற முடியும். இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் கருதுகிறது. மத்திய குழுவினர் கேரளாவிலுள்ள வங்கிகளை ஆய்வு செய்த போது, விவசாயிகள் அல்லாத ஏரளாமானோர் இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பலனடைவது தெரியவந்தது. பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், வேளாண்துறை அமைச்சக அதிகாரிகள் வீடியோகான்பரன்ஸ் முறையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கிசான் கார்டு மற்றும் விவசாயி என்பதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும், மானிய வட்டியில் நகை கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.. அவர்கள் மட்டுமே விவசாயிகளுக்கான மானியங்களையும் பெற முடியும். விவசாயிகள் அல்லாதவர்கள் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியில் தான் நகையை அடமானம் வைத்து கடன் பெற முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வரும் 30 ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் புதிய விதிமுறையை அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்