புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் சோதனையிட்டனர். புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கந்தசாமி வீட்டில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காலையில் கோரிமேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவலளிக்கப்பட்டு, அமைச்சரது இல்லத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை