மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்த ரவுடி

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 3 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி, திருந்தி வாழப்போவதாகக் கூறி சரணடைந்துள்ளார். சென்னையை அடுத்த செங்குன்றம் பாலகணேசன் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பாலா என்கிற பாலசுப்பிரமணி. இவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 10 மாதங்களாக சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள அவரை மீண்டும் வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் தேடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் சென்று பாலசுப்பிரமணி சரணடைந்தார். கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழவிடுவதில்லை என வருத்தம் தெரிவித்த அவர், திருந்தி வாழ அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)